சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசி பற்றாக்குறை உருவாகியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் வழங்குவதால், சில்லறை விற்பனையாளர்கள் கீரி சம்பாவை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் நுகர்வோர் சிரமத்தில் சிக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஆனால், பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக பற்றாக்குறை உருவாக்கி இலாபம் ஈட்ட முயற்சிக்கலாம் என சுட்டிக்காட்டி, சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் இந்த விலையை நீக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தேசிய விவசாயிகள் சங்கம் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரியுள்ளதுடன், இன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்ல உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here