அனலைத்தீவு கடற்பகுதியில் வைத்து 197 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அனலைத்தீவு கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கேரளா கஞ்சா தொகையானது 78 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here