ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து தென்மாகாண ஆளுநரான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (22) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தமது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளார்.

நடைபெற்று முடிவடைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில், வேறொரு வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளதையடுத்து, தனது தென்மாகாண ஆளுநர் பதவியை  இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து தென்மாகாண ஆளுநர் பதவியை தனக்கு வழங்கியமைக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here