அலவ்வ – பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








