பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய தினம் (16.11.2025) அரசாங்கத்தின் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் இது சட்டவிரோதமான கொடுப்பனவு என குறிப்பிட்டு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக தொழிலாளர்கள் ஊர்வலமாக நகரை சுற்றி, சவப்பெட்டிகளை ஏந்தி, எதிர்க்கட்சியினர் புகைப்படங்களை எரித்து, பதாகைகளோடும் கோஷங்களோடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கையில், அரச நிதியை மோசடிசெய்து நாட்டை நெருக்கடிக்கு இட்டவர்கள் தான் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வை எதிர்க்கிறார்கள். வரலாற்றில் ஒருபோதும் போராட்டங்கள் இல்லாமல் தற்போதைய அரசு சம்பள உயர்வை வழங்குவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியர்கள் தகுதியற்றவர்கள் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here