கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டும் வேளையில், வெடிக்காத குண்டுகள் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை உடனடியாக பளை பொலிஸாரிடம் அவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் குண்டுகளை மீட்கும் பணியை மேற்கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here