ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அந்த கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக காணப்படுவதுடன் பொதுஜன பெரமுன தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை வேட்பாளாராக நிறுத்தும் எனவும் பரவலாக பேசப்பட்டது.
கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06ஆம் திகதி பல செய்திகளும் வெளியாகின.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.








