சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விலகியுள்ளார்.
பாராளுமன்றம் இன்று (06.08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து நாமல் ராஜபக்ஷ விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூடியதாகவும், இதன்போது பிரேமநாத் சி தொலவத்த உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








