Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற...

வா அம்மா போலாம்.. தாய், தந்தை கை பிடித்து அசல்ட்டாக நடந்து சென்ற நயன்தாரா மகன்கள்..!

“வா அம்மா போலாம்..” தாய், தந்தை கை பிடித்து அசல்ட்டாக நடந்து சென்ற நயன்தாரா மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த...

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை; 485 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 09 மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1757 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, இன்று காலை 09.00 மணி நிலவரப்படி, புத்தளம் மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. பல்வேறு அனர்த்த சம்பவங்களில் 08 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரானை தாக்க வேண்டாம் என நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்..!

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, இஸ்ரேல் ஈரானுடன் தாக்குதலுக்கு தயாராவதை நிறுத்துமாறு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை...

கை வைத்தாலே தலைமுடி கொட்டுதா? இந்த பொருளை இரு தடவை போட்டால் போதும்..!

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள். இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது அழகை...

திருகோணமலை பொலிஸ் அதிகாரி இலஞ்ச வழக்கில் கைது!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!

மொனராகலை - கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரான அத்தநாயக்க எம். ஹேரத் அவர்கள் காலமானார். அவர் தனது 73 ஆவது வயதில் காலமானார். நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானாதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

"கட்டானை, Tower Side வத்தைபகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 33.75 லிட்டர் (45 பாட்டில்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 900 லிட்டர் (05 பீப்பாய்கள்) கோடா, 02 செப்புத் தாள்கள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு குக்கர் ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல்...

தெமட்டகொடவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயம்!

தெமட்டகொட, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்று நிலவிய சூழலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img