ரஷ்யாவின் இரண்டு முக்கியமான எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சியின் ஓர் பகுதியாக அமைகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தடைகள், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை குறிவைத்து விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது:

“இத்தகைய தடைகள் விதிப்பது, ரஷ்யாவை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வைக்கும் என்று நம்புகிறேன்.”என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பிற்குப் பின்னர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3% வரை உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here