Saturday, May 30, 2026
No menu items!

Priya

நிந்தவூர் பகுதியிலுள்ள பாலம் உடைந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு…!

கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஒலுவில் களியோடை பாலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள  பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நிருபர் - கனகராசா சரவணன்

சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழப்பு..!

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11.2024) காலை பாதுகாப்பு பிரதி  அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு...

பல நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. அதேநேரம், நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து...

சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இலங்கை முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக களனி, நில்வல, மகாவலி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும், யான், மல்வத்து, தெடியுரு, மஹா ஓயாக்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை...

மானிப்பாயில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு..!

மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது. மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26.11.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றி...

நாடாளுமன்ற குளத்தில் விழுந்த நிஹால் அபேசிங்கவின் வாகனம்..!

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்கவின் வாகனம் நேற்று (26.11.2024) மாலை நாடாளுமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியர் அபேசிங்க வாகனத்தில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற...

வவுனியாவில் கடும் மழை காரணமாக நீரில் முழ்கிய அரச திணைக்களங்கள்..!

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (26.11.2024) பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர்...

ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பிரதான வீதி ஓமந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் ஆகிய மார்க்கங்களில் யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 6 மாணவர்கள் மாயம்..!

காரைதீவில்  உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 மாணவர்களும் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 8 பேரை காணவில்லை. மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் அதிகாரிகள்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img