Saturday, May 30, 2026
No menu items!

Priya

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்..!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றையதினம் (24.11.2024) யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார். நேற்று (24.11.2024) காலை யாழ்ப்பாணம் - ஜே - 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன்,...

மக்களிடத்தில் ஆதரவற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? – டானியல் வசந்தன் கேள்வி..!

மக்களிடத்தில் ஆதரவற்ற கட்சிகளை ஒன்றிணைத்து  கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனிவருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில்...

யாழ் தீவகத்தில் மாவீரர் நினைவேந்தல்…

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் நேற்றையதினம் (24.11.2024)  மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயனார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு...

பொதுமக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்..!

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவிக்கின்றார்.

இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல் – 20 பேர் பலி..!

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு முன்னறிவிப்பின்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிரேஷ்ட ஹெஸ்பொல்லா அதிகாரியைக் கொல்லும் முயற்சி என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் அவசரகால பணியாளர்கள்...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன்..!

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (23.11.2024) இரவு வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,தற்காலிக முகாம்களிலும் தங்க...

தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் வைத்தியசாலையில்..!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23.11.2024) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 7...

சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை – நுகர்வோர் குற்றச்சாட்டு..!

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30-31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில வியாபாரிகள் முட்டை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சுனாவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை – நிஹால் தல்துவ தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு  எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர்...

மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு..!

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொழும்பில் வசித்துவரும்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img