Friday, May 1, 2026
No menu items!

Priya

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.24 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி நீக்க நிர்வாகத்துக்கு கால அவகாசம்..!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை உடனடியாக பதவி நீக்காவிட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்துக் கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. குறித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று (23.11.2024) பிற்பகல் ஒன்று கூடியிருந்தனர். அதன்போது, ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி நீக்குவதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை நிர்வாகத்துக்குக் கால அவகாசம்...

மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையில் பலத்த வேகத்தில் வீசக்கூடும்.  அத்துடன், குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடல் அலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேநேரம், இன்று...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!

களனி-பதலஹேனவத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதான சந்கேதநபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 516...

497 இந்திய மீனவர்கள் கைது..!

இந்த வருடத்தில் நாட்டின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து வௌியிடுகையில், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு கடற்படை...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விரைவில் வருவார் – அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (23.11.2024)சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். வைத்தியசாலையின் வளர்ச்சி...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் வெளியான வர்த்தமானி..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன்,...

இன்றைய நாளுக்கான வானிலை…

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24.11.2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம்...

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (22.11.2024) இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை (23.11.2024) மதியம் வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல...

போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவன் கைது..!

குருணாகல் பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குருணாகல் மெஹிஎல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 1...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img