Monday, October 12, 2026
No menu items!

Tamil Vani

ஐ.நா கூட்டத்தொடரில் அமைச்சர் விஜித ஹேரத் உரை

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்ற உள்ளார். வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இன்று அமைச்சர் நாட்டின் தேசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார் எனத் தெரிவித்துள்ளது. இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் கருப்பொருளான "நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல், மாற்றத்தை நிர்வகித்தல், அனைவருக்கும் பலன்களை...

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். குறித்த மானியத்துக்காக 4100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க...

டி.ஜே இசை உரிமத் தேவை தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிம (music licensing) தேவைகளை, அதன் உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் வரை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. பிறந்தநாள் விழாக்கள் உட்பட திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான உரிமம் தொடர வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவு, நவம்பரில்...

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில் 45.5 கிலோ ஐஸ் (கிறிஸ்டல் மெதம்பெட்டமைன்) மற்றும் 35.7 கிலோ ஹெரோயின் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு  போதைப்பொருட்களை...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

500 மில்லி லீட்டர் குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் விற்பனை செய்தமைக்காக பண்டாரவளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ரூ.1 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் 500 மி.லி போத்தல் ஒன்றை ரூ.100 க்கு விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டதை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது,...

பேருந்து பாதைகளை நிர்வகிக்க தீவிர நடவடிக்கை

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து முன்னுரிமை பாதைகளை நிர்வகிக்கும் விதிமுறைகளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (29) முதல் கடுமையாக அமுல்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேல் மாகாணத்தில் ஏழு பேருந்து முன்னுரிமை பாதைகளை உள்ளடக்கியது மற்றும் பயணிகள் தங்கள் இலக்குகளை பாதுகாப்பாகவும் சரியான...

டெங்கு உயிரிழப்புக்களின் உயிரிழப்பு 77 ஆக அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 99,634 ஆகும், இதேநேரம் மரண விகிதம் 0.077% ஆக பதிவாகியுள்ளது. மேலும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.53% மேல் (52,340) மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. மாவட்ட...

70 மில்லியன் கையூட்டல் தொடர்பில் நாமலிடம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவர் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி...

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையவழி  சேவை மூலம் சரிபார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டன, அதன் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு மீளாய்வுக்கு...

ஐ.எம்.எப் உடனான நிதி திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பு; பிமல் தெரிவிப்பு

2027 மார்ச் மாதத்தில் நான்கு வருடம் நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடு காலாவதியாகும் போது இலங்கையின் தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் வழமையான ஈடுபாட்டை தொடரும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய ரத்நாயக்க,...

About Me

1471 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img