Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும் என ஹிரு மீடியா நெட்வொர்க் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஹிரு மீடியா நெட்வொர்க்,2025 ஆம் வருட சொத்து அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.டி. லால்காந்தவிடம் ரூ....

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். "அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நிச்சயமாக மாற்றம் நிகழும்," என...

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்தச்...

இந்திய பிரதி ஜனாதிபதி-ஜனாதிபதி அனுர ஆகியோர் சந்திப்பு

இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், பகிரப்பட்ட வரலாறு, நாகரிகத் தொடர்புகள் மற்றும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என...

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம் குறித்த அறிக்கைகள் தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் "டோர்-டு-டோர்" விலை நிர்ணயம் பற்றிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அது இறக்குமதி செலவுகளைப் பற்றியது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வந்தடைய உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போதுள்ள கையிருப்பு மாலைத்தீவில் உள்ள ஒரு மிதக்கும் சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டு...

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்த போதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு...

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார். கடற்படையின் தகவலுக்கமைய, அந்தப் படகில் கண்டெடுக்கப்பட்ட ஆறு பைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையின் தென்கடலில்...

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது. இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக நிவாரண ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும்,...

எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி விலகினர்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...