Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தமிழர்களுடைய குரலை நசுக்குவதற்கான ஒரு சதித்திட்டம்; தி.சரவணபவன்….

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருகின்ற தமிழரசுக்கட்சியை பலவீனமாக்கி மட்டக்களப்பில் கட்சிக்கு கிடைக்கும் 4 ஆசனங்களை இல்லாமல் செய்து தமிழர்களுடைய குரலை நசுக்குவதற்காக ஒரு சதித்திட்டம் தான் இந்த 27 சுயேட்சைக் குழுக்களும் 22 அரசியல் கட்சிகளும் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் முறியடிக்க இந்த சுயேச்சைகுழுக்கள் கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என மட்டக்களப்பு முன்னாள்...

மன்னாரில் காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினர் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புகளுக்கிடையே விசேட கலந்துரையாடல்….

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள் , அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை (28.10.2024) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமூக அமைப்புகளுக்கும்,அரச...

பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்துவதே இலக்கு; ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்….

பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்தி அக்கிராமங்களில் உள்ளவர்களின் விளையாட்டு , கலை  மற்றும்  கலாச்சாரம் போன்றவற்றை முன்னிலை படுத்துவதே எனது குறிக்கோள் என  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அ.றொஜன் தெரிவித்துள்ளார். மன்னார் பிடாரி குளம் கிராமத்தில்  நேற்றையதினம் (28.10,2024)  நடைபெற்ற  நிகழ்வு ஒன்றில்   பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பாணி விஜேசிறிவர்தன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை...

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மீண்டும் பலத்த பாதுகாப்பு… 

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து திங்கட்கிழமை (28.10.2024) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்த பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25 ம் திகதிக்கும் 28 ம் திகதிக்கும்  உட்பட்ட நாட்களில் வெடிகுண்டு...

தமிழரசு கட்சியை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும்; சாணக்கியன்…

வடக்கு கிழக்கு நிர்வாகம்  மற்றும், அபிவிருத்தியை தமிழரசு கட்சி பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். எனவே எங்களை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும். அப்போது நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.  எனவே விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரே...

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது…!

இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை, ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை...

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை சந்தித்த சிவஞானம் சிறீதரன்…!

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்தார். அங்கு சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில், தமிழரசுக்கட்சி சிறீதரன் கிளிநொச்சியில் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.மூன்று பிரதேச சபைகள் மூலம் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தோம், கிளிநொச்சி மாவட்டத்திற்கு  தீயணைப்பு...

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்….

மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28.10.2024)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2...

மட்டுவில்  ஒரே இரவில், ஒரே பிரதேசத்தில் 8 வீடுகளை உடைத்து திருடர்கள் திருட்டு….

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடு உடைத்து கொள்ளை இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்ட சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) இரவு இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு வழமைபோல...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...