Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழ். பருத்தித்துறையில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு…!

யாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 2 பேர் பலி…!

கடந்த 24 மணி நேரத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நுரைச்சோலை - கரம்ப பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாம்புரி பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, அனுராதபுரத்தில் 25 ஏக்கர் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள்...

கொழும்பு கோட்டை – காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை ஆரம்பம்…!

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளதுடன் காலை 9.30...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை ஏற்றிச்...

கொட்டாவை பிரதேசத்தில் திடீரென தீ பற்றி எரிந்த வேன்…!

கொட்டாவை - மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து சனிக்கிழமை (26.10.2024) இடம்பெற்றுள்ளது. வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்விபத்தின்போது வேனில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என...

மஹியங்கனையில் 1050 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

மஹியங்கனை 50ஆம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் ஒரு கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடனும் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறுவேடத்தில் சென்ற...

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது…!

மாத்தளை, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹயாய பகுதியில் 02 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை, வஹகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக...

ஆற்றில் மூழ்கி காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு…!

அத்தனகலு ஓயா ஆற்றில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சனிக்கிழமை (26.10.2024) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த இளைஞர் தனது சக பணியாளர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன்...

மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தமிழரசு கட்சியின் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் நடந்த தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு அணி திரண்டு வந்த மக்கள். இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் ( செட்டிபாளயத்தில் ) நடந்த தமிழரசு கட்சியின்...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்…!

நேற்றையதினம் (26.10.2024) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி -  7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன - 2,612 வாக்குகள்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...