Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழில் ஊடக வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல்..!

தேர்தல் அறிக்கையிடல் மற்றும் ஊடக வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இலங்கை பத்திரிகை ஸ்தானத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு, இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் பயணித்த நபர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் 34...

சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு..!

"எமது எம்.பி எமது குரல்" எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு  யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்று(26) இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கனகரட்ணம் சுகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், இலங்கை...

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைகள் கைது…!

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது…!

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (26.10.2024) கைது செய்துள்ளனர். ஹட்டன், பொகவந்தலாவ, டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநப​ர்கள் இருவரும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார்...

கூட்டுறவு சபையின் “ஐக்கிய தீபம்” பத்திரிகை வெளியீடு!

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால்  ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதத்துக்கான இதழே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்பட்டது. சங்கானனை பல.நோ.கூ சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு...

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தமிழரசு கட்சியை சார்ந்தவர் கல்வீச்சு…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் தெரிவிக்கின்றார். குறித்த பெண் தனது (சசிகலாவின்) வீட்டின் உள்ளே சென்று வீட்டில் உள்ள அலுமாரியின்...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில்...

வடக்கு ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்…!

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28.10.2024) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால் ரயில் மார்க்கத்தின் ஊடான கடவுப் பாதைகளைப்...

யாழில் ரயிலுடன் ஹயஸ் வான் மோதுண்டு விபத்து..!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த வான் தவசிகுளம் பகுதிக்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...