Thursday, April 30, 2026
No menu items!

எரிபொருள்

எரிபொருள் வரிசையினை உருவாக்குவதா தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி; சஜித் பிரேமதாச!

கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாட்டில் எரிபொருளுக்காக வரிசைகளை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது. எரிபொருள் வரிசையினை உருவாக்குவதா கட்டமைப்பு மாற்றம் என்பதை கேட்க...

எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு சஜித் கோரிக்கை..!

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம், மதவச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (01/02/2025) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவிலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டிற்கு வர...

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்- சேவையிலிருந்து பேருந்துகள் விலக்கிக் கொள்ளப்படும் கெமுனு விஜேரத்ன..!

தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பிரச்சினை நாளைய தினத்துக்குள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தங்களது பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தேவையான அளவுக்கு அதிக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா  தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கை...

எரிபொருள் கொடுப்பனவு பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை-கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம்..!

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாளான இன்றும் (02) எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எனினும், மூன்று சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை...

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவசரக் கோரிக்கை..!

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்துள்ளளார். ”நாட்டின் போக்குவரத்து அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாது. ஏனெனில் இது பொருளாதாரத்தை...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

பதுளை - பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி மோட்டார்...

எரிபொருளுக்கான வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 72 ரூபாயும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக 50 ரூபாயும், சுப்பர் டீசல்...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு; குஷானி ரோஹணதீர…!

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், அதற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவாக...

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எமக்கு சிறந்த கடல் வளம் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று விவசாயிகள்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img