Thursday, April 30, 2026
No menu items!

எரிபொருள்

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு  ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10) இந்த விபத்து...

எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் காட்டு யானைகள் மோதி உயிரிழப்பு!

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன் இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து காரணமாக மட்டக்களப்பு தொடருந்து பாதையில் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து!

கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை...

நிவாரணங்களை வழங்க உள்ளதாக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவிப்பு..!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க...

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி என்ற...

கடற்றொழிலாளர்களுக்கு விசேட நிவாரணம்..!

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் லீற்றருக்கு 25 ரூபாவை உதவித்தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (21.08) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சிபாரிசுடன் கடற்றொழில் பரிசோதகர்கள் ஊடாக...

தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் ; ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதித் தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்த எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். "ஜனாதிபதித் தேர்தலில் நான் என்னை முன்னிலைப்படுத்தப் போவதில்லை, ஆனால் தேசத்தை மையமாக வைத்து பேசுவேன். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசத்தின் எதிர்காலம் பற்றியது" என்று 'புலுவன் ஸ்ரீலங்கா' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்...

தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் !

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இரவு வேளையில் புகையிரதம் தரித்து நின்றபோது கடந்த 9ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட சமயம், புகையிரத நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில்...

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்…!!

ஏ9 வீதியில் அநுராதபுரம் இகிரிகொல்லாவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வயலிற்குள் கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான பௌசரில்...

குறைக்கப்படுமா? எரிபொருள் விலை!!!

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சானது எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமான விடயம் என தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வர்த்தகக் குறியீட்டின்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதால் அங்கு தீர்மானிக்கப்படும் விலைகளுக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மசகு எண்ணெய் விலை 27 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img