Friday, November 6, 2026
No menu items!

அமெரிக்கா

பணிநீக்கம் செய்யப்பட்ட 12500 ஊழியர்கள்..!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் (DELL), அதன் விற்பனைப் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 13,000 ஊழியர்களை டெல் (DELL) நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் கைது!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ள பாக்கிஸ்தானை சேர்ந்த நபருக்கு  எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலைசெய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு...

முதலிடத்தில் உள்ள அமெரிக்கா!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் படி 24 தங்கம்,31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலியாவும் பிடித்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகிய விமானம்; 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இச் ச்மபவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம் ஒக்லஹோமா நகரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கமலா ஹரிஸிற்கு ஆதரவளிக்கும் பராக்ஒபாமா….!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலாஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ்  அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அநேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார். பில் கிளின்டன் ஹரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா...

இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்லத் தடை…!

இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளதையடுத்து மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், போன்ற இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தன் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இடம்பெறும் குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக அங்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க பயணிகள் அதிக...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு…!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இண்டியோனாலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான...

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தனது சமூக வலைத்தளம் மூலம் கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா…!!

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த...

அமெரிக்க வௌ்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு…!

81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் Karine Jean Pierre தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லாஸ் வேகஸ் இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர், அமெரிக்க ஜனாதிபதி அவரது...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img