Tuesday, July 28, 2026
No menu items!

குழந்தை

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு..!

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10/03/2025) காலை இடம்பெற்றுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த...

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை..!

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு தமது சம்பளத்திலிருந்து இந்திய மதிப்பில் 50,000 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காளிசெட்டி அப்பலா நாயுடுவின் இந்த அறிவிப்பு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்து...

நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து குழந்தை பலி!

ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் தனது வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து ஒரு சிறு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தை வைரம்கட்டுவ பகுதியில் வசிக்கும் 1 வயது சிறுவன். சடலம் சிலாபம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலை மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது  மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி தெரியவருவதாவது, மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான நேற்று அதிகாலை...

காற்றின் தரம் குறைவடைவதால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதிப்பு!

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேராதனை மற்றும் ஸ்ரீ...

தமிழ் மக்களின் ஆதரவாளனாக என்றும் செயற்படுவோம் ; சாய் முரளி!

இராஜதந்திர உறவைத் தாண்டியும் தமிழ் மக்களுடன் இந்தியா நெருக்கமாக செயற்படுவதாக யாழ்ப்பாண இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து இந்தியா...

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் அதிபர் கைது!

குழந்தை ஒன்றை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின்...

குழந்தைகளுக்கு அஸ்வெசும கொடுப்பனவு – அமைச்சரவை அங்கீகாரம்..!

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு, வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதேவேளை,...

பெற்றோரின் கவனயீனம் – ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட கதி..!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் நேற்று சனிக்கிழமை (04.01.2025) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை நேற்று காலையில் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை...

3 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு..!

சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தை தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை அவர்கள் இருவருக்கும் இரண்டாவது...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img