Tuesday, July 28, 2026
No menu items!

குழந்தை

வாகனம் மோதி 03 வயதுடைய குழந்தை பலி!

நேற்று மதியம் மருதானை பிரதேசத்தில் 03 வயதுடைய குழந்தையொன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் தந்தை தமது வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை பின்னோக்கிச் சென்றதாகவும், வாகனத்தின் பின்னால் சென்ற குழந்தையின் மீது தவறுதலாக மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் பலி!

பசறை, கோவிபால பிரதேசத்தில் நேற்று(31.10) 11 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டு முற்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இடி தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் சகோதரரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை காயமின்றி உயிர் தப்பினார். இச் சம்பவம்...

நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொட்டதெனியாவ - ஹலொலுவ - கந்த பிரதேசத்தில் நேற்று மாலை 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலையில் குளித்த போது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி மூவர் பலி…!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.10) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்...

கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாரதூரமான ஊசிமருந்து – மருத்துவர் அலட்சியம்!

நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதுக் குழந்தையொன்றின் கையில், அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை...

11 வயது சிறுவன் விபத்தில் மரணம்!

தெரணியகல, நூரிய கித்துல்கல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 வயது சிறுவன் தலையில் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள பாறையில் தலை அடிபட்டு படுகாயமடைந்து தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற போது சிறுவனின் தந்தை வீட்டின் பின்புறம் உள்ள சரிவில் களைகளை அகற்றிக்கொண்டிருந்ததாக விசாரணைகளில்...

அக்டோபர் 1 ஆம் திகதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு உயிரியல் பூங்காக்களில் இலவச நுழைவு!

நாட்டிலுள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் நாளை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வரும் உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய விலங்கியல் பூங்கா...

18 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட குழந்தை…!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தில், நேற்று முன்தினம்(18) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்றே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து  சுமார் 35 அடி ஆழத்தில்...

அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டம் ; ரணில் விக்கிரமசிங்க!

அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டத்தை அடுத்த தசாப்தத்திற்குள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆங்கில மொழிப் புலமை ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்யும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். தான் கல்வி அமைச்சராக இருந்த போது வெள்ளை அறிக்கை மூலம் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தும் தாம் முன்வைத்த யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்திருந்ததை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். இந்த...

காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது. காய்ச்சல்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img