Tuesday, June 9, 2026
No menu items!

சீரற்ற வானிலை

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்..!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும்...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமைக்கு திரும்பியுள்ள ஏ9 வீதி !

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவில் வெள்ள நீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெள்ள நீர் குறைவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் ஏ9...

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும் விமானப்படை!

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று புதன்கிழமை (27)  விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை  சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது ஏறாவூர் மைலவட்டவான் பிரதேசத்தில்வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிடு இருந்த நிலையில்  இருந்த ஒருவர்  ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு,...

மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு – கொழும்பு வீதி!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி  உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர்...

சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை காரணமாக வீதிகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு காணப்படுகின்றார்கள். அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 721 குடும்பங்களும் 2476 அங்கத்தவர்களும் 7 வீடுகளும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16...

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோகத்தடை ஏற்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையினையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, CEBCare எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வயோதிப பெண் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

சீரற்ற வானிலையினால் 3196 பேர் பாதிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் முந்தல் மகாகும்புக்கடவல நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img