Sunday, November 15, 2026
No menu items!

ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மருதானையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற...

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்ட் நியமனம்!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமித்துள்ளார். முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 43 வயதான துளசி கப்பார்ட், 2022ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்து பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். இவர் 20...

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்முடன் ஜோ பைடன் சந்திப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்முடன் மற்றும் ஜோ பைடன் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பும் இன்று சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள...

டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் தெரிவு !

அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்றதும் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுவதற்கு புளோரிடா மாநில பிரதிநிதி மைக் வால்ட்ஸை ட்ரம்ப் தெரிவு செய்துள்ளார். 50 வயதான மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற இராணுவ பாதுகாப்பு அதிகாரி மற்றும் போர் வீரர் ஆவார்.

ஜனாதிபதி குறித்து கேள்வி எழுப்பிய சுமந்திரன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து பேரூந்து சுமைகளை ஏற்றிச் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ விசித்திரமான காரணத்திற்காக ஜனாதிபதி நேற்று மாலை சில ஆயிரம் பேரை பஸ்களில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயார்; ஜனாதிபதி!

இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் விளைவாக அரசியல் கைதிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய...

சுமந்திரன் ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு…!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். சாவகச்சேரி தொகுதிக்கான இறுதி மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் சாவகச்சேரி நகரில் நேற்று (09.11.2024) இடம் பெற்றது. ஜனாதிபதி அனுரவிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் கூறும் லெனினிச கொள்கையின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நாங்கள் கோருகிறோம். அந்த மாற்றத்தின் பங்காளிகளாக...

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் நேற்று (08.11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் மற்றும் ஜப்பான் தூதுவர் ISOMATA Akio ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். நற்சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்...

‘முன்னாள் அரசாங்கம் ஆட்சியை கையளிப்பதற்கு முன்னர் நாட்டை அபிவிருத்தி செய்தது’; ரணில் விக்கிரமசிங்க!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் வளர்ச்சி 2024-25 ஆம் ஆண்டில் மிதமானதாக இருக்கும் என்று கணித்திருந்தும், அது சுமார் 3% ஆக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் வளர்ச்சி அடுத்த ஆண்டு 5 சதவீதத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொது நிகழ்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ரணில்...

ரணில்விக்கிரமசிங்க உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன்; ஜனாதிபதி !

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் எம். பி சிவாஜிலிங்கம் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69 வயதில் காலமானார். சனிக்கிழமை இரவு (நவம்பர் 14) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த...
- Advertisement -spot_img