Friday, July 24, 2026
No menu items!

பதுளை

பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் 2 பேர் பலி!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை பதுளை டன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 41 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர்களில் இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் பிரதிப்...

தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும்; வடிவேல் சுரேஷ்!

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அனைவரும் கைக்கோர்க்க வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பசறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களை ஒற்றுமையால் முறியடிக்க வேண்டுமென அவர் மேலும்...

வழமைக்கு திரும்பிய மலைநாட்டுத் தொடருந்து சேவை !

கடந்த 7 நாட்களாக கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலைநாட்டுத் தொடருந்து சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை கூட்டு முயற்சியிலான திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் காரணமாக, மலைநாட்டுத் தொடருந்து சேவை...

நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு…!

நுவரெலியாவில் முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது இன்று (14) நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அழைத்துச் சென்று தாக்கி கொலை !

பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...

ரயில் தடம் புரண்டதால் தடைப்பட்டுள்ள ரயில் சேவை !

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயிலின் கண்காணிப்பு பெட்டி தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று (24) மதியம் 12.30 மணியளவில் இந்த தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும்...

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். நேற்று கூடிய அரச மருத்துவ அதிகாரிகள்...

மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை……!

தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் 14 ஆண்டுகளின் பின்னர் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.  பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35) என்பவரை படுகொலை செய்தமைக்காக அவரது கணவர் சுலைமான்...

கணவனால் மனைவி மீது துப்பாக்கிச் சூடு….!

பசறை வீதி ஹிந்தகொட பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கரகஹ உல்பத,வெலிமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த பெண்ணின் கணவரே துப்பாக்கிச்...

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள்..!

2013ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக சந்கேநபர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிரான 26 முறைப்பாடுகள் தொடர்பில் பதுளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img