Sunday, June 7, 2026
No menu items!

பிரதமர்

பாதுகாப்புத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. புதிய பிரதமருக்கும் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

பிரதமரை சந்தித்த இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் !

இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு எரிக் வோல்ஷ், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (23) பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்ந்தது. உயர் ஸ்தானிகர் வால்ஷ், வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின்...

UNRC இன் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்த பிரதமர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் (UNRC) Marc-Andre Franche, இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவ ஐ.நா.வின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (அக்டோபர் 22) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்றை மேற்கொண்ட போதே Marc-Andre Franche இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த...

வவுனியாவில் புதிய உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு!

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் இன்று பிரதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கையளிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல்...

பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை சந்தித்த பிரதமர்!

மாணவர்களின் கல்வி மற்றும் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (17.10) பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கும் தீர்க்கப்படாத சவால்கள் பலவற்றை இக்கூட்டம் எடுத்துக்காட்டியது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் உட்பட பல்வேறு மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் ஒளடத உற்பத்தியில்கவனம் செலுத்தியுள்ள கியூபா!

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் கியூபா தூதுவர் இடையிலான கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்ட...

இந்திய வெளிவிவகார அமைச்சர் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு...

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு…!

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஜனாதிபதி….!

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என சிங்கப்பூர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட...

கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அனுரவும் சஜித்தும் செய்வர்கள்: ரணிலின் அதிரடி கருத்து..!

நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும், சஜித் பிரேமதாச அதனை ஏற்காது ஓடி ஒளிந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீட்டைக் கட்டுவதைப் போல படிப்படையாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ரூபாய்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img