Wednesday, July 22, 2026
No menu items!

பொலிஸ்

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி கைது..!

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, சந்தேக நபரான சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பேருந்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை மோதிவிட்டு பேருந்தை...

பொரளையில்  கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து , 5...

சாரதி அனுமதிப்பத்திரம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

சாரதி அனுமதிப்பத்திரம் செய்து தருவதாக கூறி செவித்திறன் குறைபாடுள்ள நபர் உட்பட பலரை ஏமாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் கைதுசெய்யும்போது, நபர் ஒருவருக்கு வழங்கிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பறித்து வாயில் போட்டு அழித்துள்ளார். பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய...

தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை புகையிரத நிலைய வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கும்...

பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் நீக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றியுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனராக குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்; பதில் பொலிஸ் மா அதிபர்!

புகார் அளித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், பதில் காவல் கண்காணிப்பாளரிடம் (ஐஜிபி) புகார் அளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். www.telligp.police.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். பொலிஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மற்றும் ஆராயப்படாத அனைத்து முறைப்பாடுகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு காணுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP)...

உடுகொட பிரதேசத்தில் ஆணொருவர் சடலம் மீட்பு!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகொட பிரதேசத்தில் நேற்று (16) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பிரேத பரிசோதனைக்காக வதுப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது!

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 67.500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டு இது தொடர்பான மேலதிக...

விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 03.45 மணியளவில் கட்டுநாயக்க...

SLPP அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது;நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை   

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22)சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மதியம்...
- Advertisement -spot_img