Monday, September 28, 2026
No menu items!

முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் துறையினர் ரணில் விக்ரமசிங்கவை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவில்!

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து வைத்தியர்கள் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. விக்ரமசிங்கவின் சட்டக் குழு, அவருக்கான...

கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே...

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க!

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு எதிராகவும்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடி இதய அறுவை சிகிச்சை அவசியம் – மருத்துவர் ருக்ஷன் பெல்லன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அவரது இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், விரைவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும். சில...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான இதய மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜ பிரேமரத்ன, தனது வாடிக்கையாளரின் இதயத்தின் 4 முக்கிய தமனிகளில் 3 அடைபட்டுள்ளதாகவும், இதய திசுக்கள் நுரையீரல் தொற்றுடன் நெக்ரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரின் உடல்நிலை குறித்து மருத்துவ விவரங்களையும் ஒரு இருதய நிபுணர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கணிசமான...

மருத்துவமனையில் இருந்து Zoom மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற விசாரணையில் இணைந்தார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்துள்ளது!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில்...

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது – சிறைச்சாலைத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதவான் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டால், அதற்குத்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img