Tuesday, June 9, 2026
No menu items!

விஜித ஹேரத்

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த  அமைச்சர் விஜித ஹேரத்!

கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குப் பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்‘‘ என நடிகரும்...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – விஜித ஹேரத்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனால் இன்று...

அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர்...

மாலைத்தீவின் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

மாலைத்தீவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாட்டுக்கு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலைத்தீவு தலைவர் உட்பட...

சுற்றுலா வளர்ச்சிக்காக இலவச விசா திட்டத்தை நீடித்த இலங்கை!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா விதிமுறைகளை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர், மலேசியப் பிரதமரை சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்!

மலேசியா சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று மலேசியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த போதே இச் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பானது மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்...

மலேசியா செல்கிறார் விஜித ஹேரத்..!!

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது...

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது. இன்று (11) முதல் ஜூன் 13 வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, பெடரல் அரசின் முதலமைச்சர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்...

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு!

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர்.    
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img