Monday, September 28, 2026
No menu items!

வெளிநாட்டு ஊடகங்கள்

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவர் கார்னியின் லிபரல் கட்சியிடம் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு அது நடந்தது. வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி, தொகுதிகள் எனப்படும் 164 தேர்தல் மாவட்டங்களில் லிபரல் கட்சி முன்னிலை...

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பிய வட கொரியா!

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளுக்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியதாக வட கொரியா அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த...

அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையப்பகுதி பதிவானதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் தாக்கம் கலிபோர்னியாவின் ஆரஞ்சு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டங்கள் வரை உணரப்பட்டது. சான் டியாகோ சஃபாரி பூங்காவில் வசிக்கும் யானைக் கூட்டமும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கலக்கமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்...

மியன்மாரில் மீண்டும் நிலஅதிர்வு..!

மியன்மாரில் நெற்று (11/04/2025) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை 4.1 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது . உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 160 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (08) இரவு அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர். இதில் அரசியல்வாதிகள்,...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால்...

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்துள்ள சவூதி அரேபியா!

பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன்...

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img