Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவீனங்களைக் கண்காணிக்கும் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கையை...

நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர்..!

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (03) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். மக்களின் பாதுகாப்பிற்காக நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை முதல் பரீட்சைகள் ஆரம்பம்..!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்படி நாளை முதல்...

நியாயமான விலையில் அரிசி வழங்கப்படவேண்டும் – ஜனாதிபதி!

எதிர்வரும் காலங்களில்  தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்றைய தினம் (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத்...

வரி மோசடியில் ஈடுபட்ட பந்துல-அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களம்..!

வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ரூ.50 இலிருந்து ரூ.20 ஆக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான...

தேங்காயின் விலை அதிகரிப்புக்கு தீர்வு..!

சந்தையில் தேங்காயின் விலை தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற ரீதியில் அடுத்த ஆறு...

இன்று கூடும் நாடாளுமன்றம்..!

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. அத்துடன் குறித்த கொள்கை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு வரும் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக...

இன்றைய நாளுக்கான வானிலை…!

நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை...

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..!.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

அரச பங்களாக்கள், வரியில்லா வாகன அனுமதி, எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் ரத்து…!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்திய 344 சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அல்லது மீண்டும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img