ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறாத போதிலும், அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, அது எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – அபி கம்பஹா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை தாம் கோரிய போதிலும், இரண்டு எதிர்க்கட்சிகளும் தேவையான ஆதரவை வழங்கவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

“நமது நாட்டின் எதிர்காலத்தை அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் மட்டும் தீர்மானிக்க முடியாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியல் அமைய வேண்டும்; இல்லையேல் நம் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை விட அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்தி பெருமைமிக்க தேசமாக நாம் முன்னேற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றும் இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகியோரை நான் அழைக்கிறேன். ஒன்றாக இந்தப் பயணத்தைத் தொடங்குவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 26 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட 15,000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here