நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சீரற்ற வானிலை காரணமாக  இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், 144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here