
யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் இருவரும் இரண்டு வாரங்களுக்குள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் தற்போதைய நிலைமையைப் பொறுத்து, ட்ரம்ப் – புடின் சந்திப்புக்கு “எந்தத் திட்டமும் இல்லை” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.
அமைதிக்கான அமெரிக்க மற்றும் ரஷ்ய அணுகுமுறைகளில் உள்ள பெரிய வேறுபாடுகள், இந்த சந்திப்புக்கான வாய்ப்புகளைக் குறைத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







