எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.








