Saturday, October 10, 2026
No menu items!

Tamil Vani

சிரந்தி ராஜபக்ஷ கைது!

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார். இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்வதற்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்களின்படி, அரச வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியனை பெற்று மோசடி, ஊழல்...

கச்சத்தீவு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை; இந்தியா தெரிவிப்பு

கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க எந்த எண்ணமும் இல்லை என்று இந்திய மத்திய அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, இலங்கையுடன் இந்தியா நல்ல இராஜதந்திர உறவுகளை...

ஹமாஸின் ‘அக்டோபர் 7’ தாக்குதல்; நினைவு தினம் அனுசரிப்பு

ஹமாஸின் 2023 ஒக்டோபர் 7 தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இஸ்ரேல் இன்று புதன்கிழமை அனுசரிக்கிறது, அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நாளாக கருதப்படும் இந்த சம்பவம் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நடைபெறும்...

சிரந்தி ராஜபக்ஷவின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். இன்று (07) காலை 8 மணி முதல் தற்போது வரை குறித்த அதிகாரிகள் ஷிரந்தி ராஜபக்ஷவின் கிருலப்பனையில் அமைந்துள்ள வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் புதிய விபரங்கள் வெளியாகின

சர்ச்சைக்குரிய கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன, இதற்கமைய கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என இலஞ்ச ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜானகி...

கொழும்பு தாமரை சந்தி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

கொழும்பில் தாமரை சந்தி, துறைமுகத்துக்கு செல்லும் மேம்பால நெடுஞ்சாலை மற்றும் மெரைன் டிரைவ் இணைப்புச் சாலையைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காண 91.21 மில்லியன் ரூபா சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனை கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆலோசனை சேவைகள் ஒப்பந்தத்தை மாஸ்டர் ஹேலிஸ் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் (Pvt)...

சிரந்தியின் முன்பினை மனு; விளக்கமளிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவு

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று (06) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID)...

சபாநாயகருக்கு எதிராக இந்த வாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (06) பாராளுமன்றத்தில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்வரும்  9 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சி சமர்ப்பிக்கும் என்று அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார், சபாநாயகருக்கு எதிரான பிரேரணையை இந்த வார இறுதியில்...

வாகன ஆசன பட்டிகள் அணியாத 3000 பேர் மீது நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சீட் பெல்ட் (வாகன ஆசன பட்டி) அணியத் தவறியமைக்காக சுமார் 3,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆசன பட்டி விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்...

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ராஜபக்ஷ, இன்று (05) குறித்த விண்ணப்பத்தை தாக்கல் செய்து, கைது செய்யப்பட்டால் எந்தவொரு நிபந்தனையின் கீழும்...

About Me

1458 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img