Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா களவாடுதல்) மற்றும் ஆள்மாறாட்ட மோசடி என நம்பப்படுவதாக டிஜிட்டல் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனத்தைப் போன்ற போலி டொமைன் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை...

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை (24) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், "ஹோமகம ககனா" என அறியப்படும், வெளிநாட்டில்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்க குழு,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். எவ்வாறாயினும் பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ஷி தலைமையிலான குழு சந்திக்காது என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சர் பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் ஓமான், ரஷ்யா ஆகிய...

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது வருடாந்திர மருத்துவ அறிக்கை வெளியிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளின் பேரில், அது இரண்டு மாதங்களுக்குத் தாமதப்படுத்தப்பட்டதாக நெதன்யாகு கூறியுள்ளார்....

ரணில் வீட்டில் விசாரணை; கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கண்டனம் வெளியிட்டுள்ளது. விக்ரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ் நாடு காணாத ஒன்று' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது அசகாய சூரர்களுக்கானது மாத்திரமே பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மாத்திரமே என ஒரு...

இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராகும் இலங்கை!

நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும், மேலும் எந்தவொரு தவறான செயலையும் விசாரணை செய்ய கடுமையான அமைப்புகள் செயல்படும் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமான பிரிவின்...

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. யுத்தம் காரணமாக ஈரான் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரூபியோ ஆகியோர்...

சாகரிகா ரயில் தடம் புரண்டது; கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

பெலியத்தவிலிருந்து மருதானைக்குச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வட்டுவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24) கடலோர ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து களுத்துறை வரையிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் தடம் புரண்டமை இரு தண்டவாளங்களையும்...

திறைசேரி கணினி அமைப்பிற்குள் புகுந்து 2.5 மில்லியன் டொலர் கொள்ளை!

2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் ஊடுருவி, அவுஸ்திரேலிய கடன் செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கொள்ளை அடித்துள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்கம், பல மாதங்களுக்குப் பிறகே இதைக் கண்டறிந்துள்ளதோடு, மார்ச் மாதம் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகள்...

About Me

860 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img