Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ரூபாவின் நடுநிலை மதிப்பு 330 ஆக உள்ளது!; பிரதி நிதியமைச்சர்

இலங்கையின் வங்கிகளுக்கு மத்தியிலான அந்நியச் செலாவணி சந்தையில்,நேற்றைய நிலவரப்படி 350 ஆக இருந்த ரூபாவின் நடுநிலை மதிப்பு, இன்று 330 ரூபாவாகக் குறைந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். தற்போது ஏல விலை 327 ரூபாவாகவும், எதிர்பார்க்கப்படும் விற்பனை விலை சுமார் 332 ரூபாவாகவும் உள்ளதாகக் கூறிய அவர், இந்த...

வாகனப் பதிவுத் தகடுகளை உடனடியாக பெறுமாறு அறிவுறுத்தல்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனப் பதிவுத் தகடுகளை 2026 ஜூன் 30-ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT),வாகன உரிமையாளர்களை வலியுறுத்தி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகள் உட்பட, திணைக்களத்தின் வளாகங்களில் ஏறக்குறைய 100,000...

சற்றே வலுப்பெற்ற இலங்கை ரூபா

கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று வலுப்பெற்றுள்ளன . எனினும், விற்பனை விகிதம் ரூ. 350-க்கு மேல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 342.75 மற்றும் ரூ....

பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறையில் உள்ள பிரவுன்ஸ் ஹில்லில் காணி கொள்வனவு செய்வதற்காக பசில் ராஜபக்ச சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு இந்த...

களனி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

களனி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு களனி ஆற்றை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி ஆற்றில் உயர்ந்து வரும் நீர்மட்டமானது, ஹங்வெல்ல, சீத்தாவக்க, டொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம,...

கிரிக்கட் சபையின் நிதிப்பிரச்சினைகள் பாரதூரமானவை;எரான் விக்ரமரத்ன

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் தனது முதல் ஊடக சந்திப்பில் பேசிய விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிதிகளை ஆய்வு செய்ய தமது குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் சபையின்...

ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து ஐ.தே.க எச்சரிக்கை

கடந்த 20 மாதங்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எச்சரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான மதிப்பு சுமார் 292 ரூபாலிருந்து 354 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்தகால பொருளாதாரக் கொள்கைகளைத் தொடராமை மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உருவாக்குவதற்கான தெளிவான திட்டம் இன்மையே இதற்கு காரணம் என...

மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 17.3% சரிந்து $114.75 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. ஈராக்கிற்கான ஏற்றுமதி 38% சரிந்துள்ளதோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேயிலையில் சுமார் அரைப்பங்கை, (சுமார் $680 மில்லியன்), மத்திய கிழக்கு நாடுகள் கொள்வனவு செய்கின்றன. இந்நிலையில் தற்போது...

அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சபையில் மறுத்துள்ளார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிடும் பெண்ணை தான் சந்தித்ததே இல்லை எனவும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது," என்றும் அவர் மேலும் கூறினார். மேலும்...

வாகன இறக்குமதி தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சபையில் குற்றச்சாட்டு

தெரிந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களைத் (LCs)திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தினமும் 1,700-க்கும் மேற்பட்ட கடன் கடிதங்கள் வங்கிகளினால் அனுப்பிட்டு வருவதாகவும் அவர் கூறினார். வாகனங்களை இறக்குமதி செய்ய அண்மையில் அரசாங்கம் மேலதிகமாக 50 வீத கட்டணத்தை அறிவித்தது. இதன் காரணமாக வாகனம்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...