Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

போதைப்பொருள் விற்பனை மூலம் சொத்து சேர்த்த தம்பதியர் கைது

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தம்பதியினரின் சொத்துக்களையும் உடைமைகளையும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுப் பிரிவு முடக்கியுள்ளது. சந்தேக நபர்களின் நிதி நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரிவில் உள்ள ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேனை மற்றும் நல்லத்தன்னி காவல் நிலையங்கள் நடத்திய சோதனைகளின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட...

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நெருக்கமாகப் பணியாற்றி...

கபிலவிற்காக பணம் பெற்றுக்கொண்டு பிணை நின்றவர்களுக்கு பிணை!

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்க பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா இன்று (20) உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் தலா 500,000 மதிப்புள்ள இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஒரு...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பக்கெட்டின் விலை 125 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல்!

பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று (19) கைது செய்தனர். இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் (சுமார் 51 இலட்சம்) மதிப்புள்ள கைபேசிகளும் 140 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இவை சைபர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட கூடியவை...

உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட திட்டம்!

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன பதிவு என் அச்சிடும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுத் ஏசியன் டெக்னொலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் ஏற்கனவே இயந்திரங்களை...

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர் வீரர்கள் நினைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார். இராணுவத்தினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதை மாத்திரம் விரும்பவில்லை என்றும்,...

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.140.56 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இரு பயணிகளும் நேற்று காலை பேங்கொக்கிலிருந்து வந்துள்ளனர் எனவும் 23 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும், கொழும்பில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்தவர்கள்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நெல்,சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிர் செய்தவர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, பயிர் சேதமடைந்த விபரங்களை...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...