Sunday, November 22, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முன்னாள் எம். பி சிவாஜிலிங்கம் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69 வயதில் காலமானார். சனிக்கிழமை இரவு (நவம்பர் 14) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) சார்பில் 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தை நாடாளுமன்றத்தில்...

ரஷ்ய சுற்றுலா பயணியை மீட்ட இலங்கை உயிர்காக்கும் வீரர்

மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கவிருந்த 57 வயதான ரஷ்ய சுற்றுலா பயணி, இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காக்கும் வீரர்களின் விரைவான நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார். இலங்கை கடலோர காவல்படையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஞாயிறு அன்று காலை சுமார் 9.20 மணியளவில் நடந்துள்ளது. இதன்போது அனடோலி என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய நாட்டவர் கடலில் தத்தளிப்பதை உயிர்காக்கும்...

 15 வயது சிறுமி குழந்தையுடன் மீட்கப்பட்ட சம்பவம்; அமைச்சர் கவலை

நக்கிள்ஸ் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் நடந்த நிலையில், 15 வயது சிறுமி பச்சிளம் குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். நவம்பர் 14 ஆம் திகதி வெளியிட்ட விசேட அறிக்கையில், ஒரு தாயாக தான் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக...

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு லாஃப்ஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு

சமீபத்திய எரிவாயு தட்டுப்பாட்டுக்காக நுகர்வோரிடம் லாஃப்ஸ் (LAUGFS Gas PLC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளிந்த குருகுலசூரிய மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, 12.5 கிலோ சிலிண்டரின் விலையை 1,775 ரூபாவால் அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை அவர் விளக்கியுள்ளார். பல வாரங்களாக நீடித்த தட்டுப்பாடு, சர்வதேச விநியோக இடையூறுகள் மற்றும் நிறுவனத்தின் ஹம்பாந்தோட்டை எரிவாயு (LPG) முனையத்தை...

காணாமல் போன சிறுமி, 2 மாத குழந்தையுடன் வனக் குகையில் மீட்பு

சுமார் 5 மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி, தனது 2 மாத குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒதுக்குப்புறமான குகை ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, மீமுரே அருகே உள்ள வனப்பகுதியில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி...

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (13) வெள்ளிக்கிழமை மாலை வலேபொட உடகந்த பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் போது,...

களுத்துறையில் உணவக உரிமையாளர், மனைவி கொலை-சந்தேகநபர் கைது

களுத்துறையில் கடந்த மாதம் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லஸ்ஸ பகுதியில் உள்ள அவர்களது உணவகத்திற்குள் வைத்து கடந்த ஒக்டோபர் 9, அன்று இந்த தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும்...

நாட்டில் முதல் முறையாக தனியார் ஜெட்! ஒருவருக்கு ரூ.7 கோடிக்கு மேல் கட்டணம்! 

பிரசித்தி பெற்ற  போர் சீசன் பிரைவேட் ஜெட் (Four Seasons Private Jet Experience) பயணத்தில் 2028 ஆம் ஆண்டு தொடக்கம், முதல் முறையாக இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. 23 நாட்கள் நடைபெறும் இந்த ஆடம்பர பயணத்தில் 48 உயர் ரக பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஒருவருக்கான கட்டணம் 238,000 அமெரிக்க டொலர்கள்  (இலங்கை ரூபாயில்...

 தேரர்களிடையே மோதல்;14 தையல்களுடன் வெளியேறிய சத்தாரதன தேரர் 

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தள பதிவு ஒன்றில் அவர், தனது உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அனுர...

 2 சீன உணவகங்கள், ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு ரூ.444,000 அபராதம்

கொழும்பில் உள்ள 3 உணவு வர்த்தக நிறுவனங்களுக்கு 148 உணவு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தமாக 444,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இயங்கும் 2 சீன உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று இவ்வாறு அபராதம் செலுத்தியுள்ளன. கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையை அடுத்து...
- Advertisement -

Latest News

தனுஷின் அதிகூடிய முதல் நாள் வசூல் படமாக மாறிய ‘ஓம்’

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'ஓம்' திரைப்படம் நவம்பர் 20 (நேற்று) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா,...