Tuesday, October 6, 2026
No menu items!

புதிய செய்திகள்

குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு முறைக்கேடான வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உதவி வழங்கியதாக கூறப்படும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர் நேற்று (17) காலை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வைத்து கைது...

ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகம் 

இலங்கை ரயில்வே சேவை, முதன்முறையாக பயணிகள் (இணையம்) ஒன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யக்கூடிய புதிய டிஜிட்டல் டிக்கெட் தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரவேஷா (Pravesha) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையை http://www.pravesha.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பிரவேஷா Pravesha மொபைல் செயலி ஊடாக அணுக முடியும். பயணிகள் தங்கள் பயண விபரங்களை...

அரச செலவுகளை அதிரடியாக குறைத்த பாகிஸ்தான்

அரச செலவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் எரிபொருள் சேமிப்புக்காக கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்த பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரச வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆயுதப்படைகள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பெடரல் வருவாய் சபையின் செயற்பாடுகளுக்கு இந்த வரம்பு...

தெமட்டகொடையில் துப்பாக்கிச்சூடு; சாரதி ஒருவர் உயிரிழப்பு

தெமட்டகொடை 'களு பாலம்' அருகில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வரும் போது உயிரிழந்துள்ளார். குறித்த சாரதி தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூடு...

வசந்த கரன்னாகொட,யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு தொடர்பில் விசாரணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம்,...

48 மணிநேர ரயில்வே வேலைநிறுத்தம்; சேவையில் தொடரும் அலுவலக ரயில்கள் 

ரயில்வே தொழிற்சங்கங்களால் நேற்று (16) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், அனைத்து அலுவலக புகையிரதங்களும் திட்டமிடப்பட்ட இடங்களிலிருந்து தங்கள் பயணங்களை ஆரம்பித்துள்ளதாகவும், பயணிகளுக்கான சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ரயில்வே பொது முகாமையாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தில், ரயில் இயக்குபவர்கள், கட்டுப்பாட்டாளர்கள்,...

மட்டக்குளி கோர விபத்து; மேலதிக தகவல்கள் வெளியாகின

மூன்று பேரினது உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைய காரணமான மட்டக்குளி கோர விபத்து தொடர்பான மேலதிக விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 16 இரவு பெர்குசன் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வத்தளை திசையில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. அதன் பின்னர் அந்த கார்...

நக்கிள்ஸ் – மினி உலக முடிவில் இளைஞனின் சடலம் மீட்பு

நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள மினி உலக முடிவு என அழைக்கப்படும் (Mini World's End) இடத்தில் இருந்து தவறி விழுந்து காணாமல் போன 27 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெனிக்ஹின்ன, கந்தேகம்மெத்த பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை (11) வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது கையடக்கத்...

போயிங் 777-9 ரக விமானம்; நாட்டுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை

எமிரேட்ஸ் விமான நிறுவனமும் போயிங் நிறுவனமும், போயிங் 777-9 ரக விமான சேவையை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையுடன் (CAASL) ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. போயிங் மற்றும் எமிரேட்ஸ் பிரதிநிதிகள்,குறித்த அதிகார சபையுடன் அதன் (CAASL) தலைமையகத்தில் சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை...

இந்தியாவின் அன்பளிப்புடன் மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து பிரிவு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள் செப்டம்பர் 16 அன்று இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபாய் அன்பளிப்புடன் ஆரம்பமானது. கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்த திட்டத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய...
- Advertisement -

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...