Tuesday, August 18, 2026
No menu items!

புதிய செய்திகள்

தீர்வு இல்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கை – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் 

ரயில்வே திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில், தீவிரமான சமிக்ஞை கோளாறுகள் பல உள்ள நிலையில், அதிகாரிகள் தலைமன்னார் பாதையில் ரயில் சேவையை பாதுகாப்பற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம்...

ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக மீண்டும் வலுவான தாக்குதல்களை நடத்த தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதலை நடத்த தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற "ரடம எகட்ட" தேசிய நடவடிக்கை தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன்...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காது கடமையை புறக்கணித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன...

நீதிபதிகளின் ஓய்வு வயது; சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரெஞ்சு சட்ட சபை

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எழுப்பியுள்ள கவலைகளுக்கு பிரெஞ்சு தேசிய சட்ட சபை (CNB) முழு ஆதரவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 3 அன்று பெரிஸில் இடம்பெற்ற பிரெஞ்சு தேசிய சட்ட சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும்  இலங்கை...

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71% ஆல் குறைந்து, ஒரு பீப்பாயின் விலை 82.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை 1.16% ஆல் குறைந்து, ஒரு பீப்பாயின் விலை 88...

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும், மற்றுமொரு நபருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்த தீர்ப்பை வழங்கினார். 2008 ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றிய...

ஆசிய அபிவிருத்தி வங்கி நாட்டுக்கு 200 மில்லியன் டொலர் நிதியுதவி

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடுத்து, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது. இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ்...

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த திணைக்களம், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் ஏனைய...

ஜேர்மனியில் அதிக வெப்பத்தால் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் உயிரிழப்பு 

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக இந்தாண்டு இதுவரையில் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஆர்.கே.ஐ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (30) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வாராந்த சராசரி வெப்பநிலை செல்சியஸ் 20 டிகிரிக்கு மேல் அதிகரித்ததன் காரணமாக,...
- Advertisement -

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...