Wednesday, November 25, 2026
No menu items!

புதிய செய்திகள்

ரயில் மற்றும் பஸ் விபத்து; 9 சிறுவர்கள் வைத்தியசாலையில்

ஹபராதுவை பொலிஸ் பிரிவின் கொக்கல பகுதியில் உள்ள ரயில் கடவை ஒன்றில் இன்று (25) பகல் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 9 சிறுவர்கள் காலி - கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார். இந்த குழந்தைகளில் இருவர் பிரதேசவாசிகளால்...

​ரம்புக்கனை, பேராதனை-கம்பளை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

​ரம்புக்கனை மற்றும் பேராதனை–கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (25) நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ​ரம்புக்கனைக்கும் பேராதனைக்கும் இடையே உள்ள கடிகமுவை ரயில் நிலையத்திற்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ​ரயில் பாதையை விரைவில் சீரமைக்க நேற்று (24) மற்றும் இன்று அவசர...

விஹாரமகாதேவி போராட்டம் பிக்குகளால் கைவிடப்பட்டது

ஞானசார தேரரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் தாம் தலையீடு செய்வதாக மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ள நிலையில், கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பஉலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார். சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் இன்று (25) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் ரூபாய் அபராதம்

அம்பாறை பகுதியில் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரசபையினால்...

தெற்காசியாவில் மிக குறைந்த பசி அளவீட்டை கொண்ட நாடான இலங்கை

தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகக் குறைந்த பசி குறியீட்டு மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது என 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டின் பசி நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. அக்டோபர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையின்படி, இலங்கை 10.2 மதிப்பெண்களைப் பதிவு...

நாட்டை அதிர செய்துள்ள போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை

தாலல்ல, மாத்தறையில் உள்ள நாவொட்டுன்ன கடற்கரையில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளன. கடற்படையின் கூற்றுப்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (24) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு மண்சரிவு முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 04.00 மணி முதல் நாளை (25) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின்...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

10 வருட இடைவெளிக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது, அதன் முதல் விமானம் இன்று  (24) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து BA2045 விமானமாக இயக்கப்பட்ட போயிங் 777-200ER விமானம் இவ்வாறு இன்று காலையில் கொழும்பை வந்தடைந்தது. லண்டன் கட்விக் மற்றும்...

7.7 பில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம்; ஜனாதிபதி மேற்பார்வை

முன்மொழியப்பட்ட அனுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23) பார்வையிட்டார், வரலாற்று நகரத்தின் தொல்பொருள் மற்றும் மத முக்கியத்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்தினார். 7.7 பில்லியன் ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, இந்திய அரசாங்கத்திடமிருந்து நிதி பெறப்பட உள்ளது. இது அணுகல் வீதிகள், பக்தர்கள் மற்றும்...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு தவறாக பயன்படுத்தியமை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி இன்று (24) வெளியான சிங்கள மொழி அரசு செய்தித்தாளில் பகிரங்க மன்னிப்பு வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 29 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இணங்க, பௌசி அரசின் திரட்டு நிதிக்கு சுமார்...
- Advertisement -

Latest News

இளம் பெண் கணவரால் கொலை; பொலிஸார் விசாரணை

வாகரை கதிரவெளியில் உள்ள வீட்டில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 23 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்...