Wednesday, November 25, 2026
No menu items!

புதிய செய்திகள்

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு அருகே உள்ள கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும் அங்கு இதுவரை உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசியமற்ற அரச நிறுவனங்கள் மூடப்படும் வாய்ப்பு; ஜனாதிபதி

தேவையற்ற அல்லது திறமையற்றதாக அடையாளம் காணப்பட்ட 34 அரச நிறுவனங்களை மூடுவது அல்லது இணைப்பது குறித்து ஆராய நிதி அமைச்சு ஒரு குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (23) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் இல் நடைபெற்ற அரச அளவையாளர் சங்கத்தின் 100வது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...

சீராற்ற காலநிலையால் ரயில் சேவை பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை இடையிலான சகல ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, குறித்த பகுதியில் மண் மேடு  சரிந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அவற்றை...

கொலைகள்,துப்பாக்கிச் சூடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டில் 29 ஆக பதிவாகிய நிலையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 18 ஆக குறைந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை இலக்கு வைத்து...

சந்தைக்கு 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்

நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கொரிந்தியன் CORINTHIAN கப்பல் நேற்று (22) நாட்டை வந்தடைந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்று மாலையே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், 350,000 எரிவாயு...

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

தற்போது விளக்கமறியலில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில்...

 நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (22) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டு, நாளை மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை நிலை 2 - அவதானமாக இருக்கவும் (அம்பர்) களுத்துறை மாவட்டம்: ஹொரண, மத்துகம இரத்தினபுரி...

செல்லப்பிராணியை காப்பாற்ற சென்ற பெண் உயிரிழப்பு

வரக்காபொல பகுதியில் தனது செல்லப் பூனையை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக கிணற்றில் விழுந்து 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வரக்காபொல, அல்கம, மதுருப்பிட்டியைச் சேர்ந்தவர். அக்டோபர் 20 ஆம் திகதி இரவு 10 மணியளவில், வீட்டின் பின்புறம் பூனைகள் அழும் சத்தம் கேட்டு, அவற்றில் ஒன்று கிணற்றில் விழுந்ததை அவர் கண்டுபிடித்த போது இந்த...

சிசிடிவி காணொளியில் சிக்கிய சங்கிலி திருடன்

சாலையோரக் கடையொன்றில் பெண் ஒருவரிடமிருந்து சங்கிலியை பறித்துவிட்டு தனது சகாவுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த காட்சிகளின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கடைக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது, அதன் பின் அவர்களில் ஒருவர் பெண் கடை உரிமையாளரை அணுகுகிறார். சந்தேக நபர் கடை உரிமையாளரிடம் பொருள் கேட்பதையும்,...

பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கு பிக்குகள் எச்சரிக்கை

கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தைத் தொடரும் பலாங்கொட கஸ்ஸப தேரர், சிறையில் உள்ள பிக்குவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடும் மழைக்கு மத்தியிலும் தொடரும் சத்தியாகிரகத்தின் போது பேசிய கஸ்ஸப...
- Advertisement -

Latest News

இளம் பெண் கணவரால் கொலை; பொலிஸார் விசாரணை

வாகரை கதிரவெளியில் உள்ள வீட்டில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 23 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்...