Wednesday, November 25, 2026
No menu items!

புதிய செய்திகள்

நாட்டில் 30000 நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் அடையாளம்

நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் அதிகமான நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் வலியுறுத்தியதாவது, இம்மாதம் 3ஆம் திகதி முதல் இன்று...

சவுதியில் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு,8 பேர் காயம்

சவுதி அரேபியாவின் கிழக்கு நகரமான தம்மாமில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. காயமடைந்த அனைவரும், சிறு காயங்கள் முதல் ஆபத்தான நிலை வரை காயமடைந்துள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்...

இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பொலிசாரினால் பல குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்ததுடன், ஹபராதுவவில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (21) ஹபராதுவ எரமுதுகஹா சந்திப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்...

கோடிக்கணக்கான பெறுமதியை கொண்ட போதைப்பொருள் கடத்திய நபர் கைது

46,460,000 ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (21) அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்,...

மீண்டும் செயற்பாட்டை தொடரும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்

நுரைச்சோலை அனல் மின் நிலையம் நாளை (22) மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான தேவை நீங்கக்கூடும் என்று தேசிய கணினி இயக்குனர் (NSO) தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாடு தழுவிய மின்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின்...

பாராட்டா, சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், குறித்த உணவுகளின் விலையை சிறியளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக இன்று தெரிவித்தார். பணிப்பாளர் குழு கூட்டத்திற்கு பிறகு அதிகரிக்கப்பட்ட விலையை அறிவிப்பதாகவும் அவர்...

7 மாகாணங்கள் மற்றும் அநுராதபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டல மாற்றம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால், ஏழு மாகாணங்கள் மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 21 முதல் அடுத்த சில நாட்களில் தீவு...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (21) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரியின் சில பகுதிகளுக்கு அம்பர் நிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள...

பிரசன்ன ரணதுங்க மீதான வழக்கு மீண்டும் ஜனவரியில் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மீண்டும் 2027 ஜனவரி 26 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதாரகம முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது பிணையில்...

காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் 28ஆம்...
- Advertisement -

Latest News

இளம் பெண் கணவரால் கொலை; பொலிஸார் விசாரணை

வாகரை கதிரவெளியில் உள்ள வீட்டில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 23 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்...