Sunday, October 4, 2026
No menu items!

புதிய செய்திகள்

70 மில்லியன் கையூட்டல் தொடர்பில் நாமலிடம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவர் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி...

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையவழி  சேவை மூலம் சரிபார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டன, அதன் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு மீளாய்வுக்கு...

ஐ.எம்.எப் உடனான நிதி திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பு; பிமல் தெரிவிப்பு

2027 மார்ச் மாதத்தில் நான்கு வருடம் நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடு காலாவதியாகும் போது இலங்கையின் தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் வழமையான ஈடுபாட்டை தொடரும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய ரத்நாயக்க,...

கையெறி குண்டு தாக்குதல் சம்பவம்; மேலும் இருவர் கைது

தெஹிவளையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை மட்டும் அவர்களது தந்தை படுகாயமடைந்தமைக்கு காரணமான கையெறி குண்டு தாக்குதல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குள் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப்...

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு இன்று (25) அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணைகளை அடுத்து ஷிரான் பாசிக்கின் பணத்தை...

கையூட்டல் முயற்சி; முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இலஞ்ச முயற்சி தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல்...

கருப்பு பவளம் வைத்திருந்த இருவர் கைது

இரத்தமலானையில் மெலிபன் சந்திக்கு அருகிலும், கல்கிசையில் உள்ள "நிசல செவன" மயானத்திற்கு அருகிலும் இன்று (25) கருப்பு பவளத்தை (Black Coral) சட்டவிரோதமாக வைத்திருந்த  இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. பெல்லன்விலவில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நடத்திய...

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு; ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

சர்ச்சைக்குரிய க்ரிஷ் (Krish) ஒப்பந்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் அக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நேற்று (24) பிற்பகல் கொழும்பு பிரதான...

எலக்ட்ரோனிக் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் நடவடிக்கை காரணமாக 8 மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப்பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி...

 கடல் கொந்தளிப்பு,பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தியாவிற்கு உள்ளே நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தால், மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவின் கடல் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும்,...
- Advertisement -

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...