Sunday, October 4, 2026
No menu items!

புதிய செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மானியம் வழங்க அரசு பரிசீலனை

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதை முன்னிட்டு நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போது அதிகரித்துள்ள உலக சந்தை எரிபொருள் விலைக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் தற்போது...

ஈஸ்டர் தாக்குதல்;15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக 15 பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு நிரந்தர மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று (22) உத்தரவு பிறப்பித்தது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு...

நிலச்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

நிலச்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்கள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (22) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்...

22வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல – நீதிமன்றம்

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். இது இலங்கை அரசியலமைப்பிற்கு இணங்கியதாக உள்ளது என அவர் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 83வது சரத்தின் பிரகாரம் 22வது திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள்...

11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்திற்கு காரணம் அதிவேகம் – பொலிஸார்

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் வண்டி சாரதியின் அதிக வேகம் மற்றும் கடுமையான கவனக்குறைவே 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட தெற்கு அதிவேக வீதி விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் காலை சுமார் 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெப் வண்டி திடீரென நிறுத்தப்பட்டு  (பிரேக்...

டொன் பிரியசாத்தின் சகோதரர் கொலை; சந்தேக நபர் கைது

கடவத்தை வாபட பகுதியில் எட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொல்லப்பட்ட பாதாள குழு செயற்பாட்டாளர் டொன் பிரியசாத்தின் சகோதரரின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தந்தையே டொன் பிரியசாத் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என்றும் பொலிஸார்...

அனோஜனை தண்டனையில் இருந்து மீட்க அதிகபட்ச முயற்சி – ஜனாதிபதி உறுதி

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெறுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோரை இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இந்த விடயத்தில் சட்டரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தலையிடுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சவுதி...

அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள படகுகளை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளும் வரும் நாட்களில் பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு நிலை எதிர்பார்க்கப்படுவதால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான நீர்ப்பரப்புக்கு செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை...

மஸ்கெலியாவில் பாரிய மண்சரிவு – குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அதற்கு மேலே அமைந்துள்ள தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெய்த கடும் மழையுடன் மௌஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேலே அமைந்துள்ள இந்த தேயிலைத் தோட்டத்தின் பெரும்பகுதி...

உயர்தர மாணவர்களுக்கான செய்முறை பரீட்சை அட்டவணை வெளியீடு

உயர்தர எழுத்துப் பரீட்சைகளுக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த அட்டவணைக்கமைய, நடனம் (கீழைத்தேய மற்றும் பரதம்), சங்கீதம் (கீழைத்தேய, கர்நாடக மற்றும் மேலைத்தேய) மற்றும் நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும்...
- Advertisement -

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...