Monday, October 5, 2026
No menu items!

புதிய செய்திகள்

டொன் பிரியசாத்தின் சகோதரர் கொலை; சந்தேக நபர் கைது

கடவத்தை வாபட பகுதியில் எட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொல்லப்பட்ட பாதாள குழு செயற்பாட்டாளர் டொன் பிரியசாத்தின் சகோதரரின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தந்தையே டொன் பிரியசாத் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என்றும் பொலிஸார்...

அனோஜனை தண்டனையில் இருந்து மீட்க அதிகபட்ச முயற்சி – ஜனாதிபதி உறுதி

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெறுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோரை இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இந்த விடயத்தில் சட்டரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தலையிடுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சவுதி...

அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள படகுகளை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளும் வரும் நாட்களில் பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு நிலை எதிர்பார்க்கப்படுவதால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான நீர்ப்பரப்புக்கு செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை...

மஸ்கெலியாவில் பாரிய மண்சரிவு – குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அதற்கு மேலே அமைந்துள்ள தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெய்த கடும் மழையுடன் மௌஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேலே அமைந்துள்ள இந்த தேயிலைத் தோட்டத்தின் பெரும்பகுதி...

உயர்தர மாணவர்களுக்கான செய்முறை பரீட்சை அட்டவணை வெளியீடு

உயர்தர எழுத்துப் பரீட்சைகளுக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த அட்டவணைக்கமைய, நடனம் (கீழைத்தேய மற்றும் பரதம்), சங்கீதம் (கீழைத்தேய, கர்நாடக மற்றும் மேலைத்தேய) மற்றும் நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும்...

சீரற்ற காலநிலையால் 38 பாடசாலைகள் மூடப்பட்டன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் போது பாடசாலைகளின் செயல்பாடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மாகாண கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இன்று (21) காலை 9.00 மணி நிலவரப்படி, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை என மொத்தம் 38...

மன்னார் கடலில் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இருவர் மீட்பு

மன்னார் வடக்கு கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் இன்று (21) அதிகாலை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 19ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு மீண்டும் மீன்பிடி துறைமுகத்திற்கு வரவில்லை எனவும் அந்த படகை தேடுவதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும் கடற்றொழில்...

போதைப்பொருளுடன் தொடர்புடைய தரப்புகள் அணிதிரள்கின்றன – ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு மத்தியில், சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிராக அணிதிரண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பெற்றோர்களும் மக்களும் நீதித்துறை மீது அதிக நம்பிக்கையுடன்...

எரிபொருளுக்கு மானியம் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மானியம் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தித்வா புயலினால் பாடசாலைகளுக்கு 227 கோடி ரூபாய் இழப்பு

நாட்டில் ஏற்பட்ட கடந்த தித்வா சூறாவளி காரணமாக 150 தேசிய பாடசாலைகள் மற்றும் 07 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு 227 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ.2,274,230,000 என அமைச்சின் பொறியியல் பிரிவால் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது...
- Advertisement -

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...