இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக செயற்படுகின்றன.
இந்த வருடம் தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடாத்தும் இத்தாலியானது இந்தியா உட்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றதன்பின்னர் பிரதமர் மோடியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.